1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 7 மே 2016 (16:16 IST)

சோனியா காந்தியிடம் கேள்வி கேட்க பிரதமருக்கு தைரியம் இல்லை: அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி ஜந்தர் மந்தரில் அகஸ்டா வெஸ்டெலேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் தொடர்பாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு, போராட்டத்துக்கு தலைமை தாங்கினார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.


 
 
இந்த போராட்டத்தின் போது பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், இந்த ஊழல் தொடர்பாக சோனியா காந்தியிடம் கேள்வி கேட்க கூட பிரதமர் மோடிக்கு தைரியம் இல்லை என்றார். மோடியின் ஆட்சியில் இந்த ஊழல் குறித்தான விசாரணை ஒரு இன்ச் கூட நகராது என கூறினார் அரவிந்த் கெஜ்ரிவால்.
 
மேலும் இது குறித்து பேசிய அவர், கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவார்கள் என மோடி வாக்குறுதி அளித்து இருந்தார். ஆனால், இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், யாரும் சிறைக்கு அனுப்படவில்லை.
 
ஊழல் குற்றவாளிகள் தண்டிக்க வேண்டும் பாதுக்காக்க கூடாது என்பதற்கு தான் பிரதமராக உங்களை நாங்கள் ஆக்கினோம் என கூறிய அவர், மோடியை நோக்கி, சோனியா காந்தியிடம் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை அல்லது ஏன் சிறைக்கு அனுப்படவில்லை என்று நாங்கள் கேட்கிறோம் என்றார்.