வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (11:59 IST)

ஆரம்பித்தது பட்ஜெட் தாக்கல் – சில முக்கிய அறிவிப்புகள் ….

2019-20 ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதனை இடைக்கால நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தாக்கல் செய்து வருகிறார்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில் சில முக்கிய அறிவிப்புகள் இதுவரை வெளியிடப்பட்டுள்ளன. பட்ஜெட் தாக்கலை முன்னிட்டுக் காலையில் இருந்தே பங்குசந்தை ஏற்றத்தில் இருந்து வருகிறது.
  • பி எஃப் சந்தாதாரர்கள் உயிரிழப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் காப்பீடு 6 லட்சம் உயர்த்தப்பட்டுள்ளது.
  • 50 கோடி மக்களுக்கு மருத்துவக்காப்பீடு அறிமுகப் படுத்தப்படவுள்ளது
  • 2 ஹெக்டேர் நிலம் வைத்துள்ள அனைத்து விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000
  • விவசாயிகள் வருமானத்தை 2022 க்குள் இரட்டிப்பாக்கப்படும் என உறுதி
  • பணிக்கொடை வரம்பு 10 லட்சத்தில் இருந்து 30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
  • மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு 32 % -ல் இருந்து 42 சதவீதமாக அதிகமாக்கப்பட்டுள்ளது