1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 15 ஏப்ரல் 2018 (13:17 IST)

மாணவர்கள் ஆதார் எண்ணை ஆன்லைனில் வெளியிடக்கூடாது; மத்திய அரசு உத்தரவு

பி.எச்.டி பயிலும் மாணவர்களின் ஆதார் எண்ணை வெளியிடும் உத்தரவை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.


 

 
நாடு முழுவதும் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு யு.ஜி.சி கடிதம் ஒன்று எழுதியது. அதில் பி.எச்.டி பயிலும் மாணவர்களின் ஆதார் விவரங்களை இணையதளத்தில் வெளியிடுமாறு கூறியிருந்தது.
 
இதற்கு மாணவர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆதார் சட்டத்தின் படி தனிப்பட்ட ஒருவரின் ஆதார் விபரங்களை வெளியிடக் கூடாது. இதையடுத்து பி.எச்.டி. பயிலும் மாணவர்களின் ஆதார் விபரங்களை இணையதளத்தில் வெளியிடுவதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.