திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 15 ஜூன் 2017 (23:54 IST)

முதல் நாளிலேயே விலை குறைகிறது பெட்ரோல்-டீசல். பொதுமக்கள் மகிழ்ச்சி

ஜூன் 16 முதல் அதாவது நாளை முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளின் மாற்றம் தினசரி இருக்கும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. தங்கம் மற்றும் வெள்ளி போலவே இனி பெட்ரோல், டீசலின் விலையும் ஒவ்வொரு நாளும் காலை 6 மணிக்கு அன்றைய தினத்தின் விலை அறிவிக்கப்படும்



 


இந்த நிலையில் நாளை காலை 6 மணிக்கான பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் சற்று முன்னர் அறிவித்துள்ளன. இதன்படி  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.12, டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.24 குறைக்கப்படுகிறது. தினசரி விலை நிர்ணயம் செய்யும் முதல் நாளிலேயே பெட்ரோல் டீசல் விலை குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை கடந்த சில நாட்களாகவே குறைந்து கொண்டே வருவதால் முதல் நாளை போலவே இன்னும் சில நாட்களிலும் விலை குறையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்