திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 13 ஜூன் 2017 (23:24 IST)

உடலுறவை நேரில் பார்க்க டிக்கெட் வாங்கி குவியும் கூட்டம்! நீதிபதிக்கு ஏற்பட்ட தர்மசங்கடம்

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராஜஸ்தான் ஐகோர்ட் நீதிபதி நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, 'மயில்கள் உடலுறவு கொள்ளாது என்றும், ஆண் மயிலின் கண்ணீரால் பெண் மயில் கர்ப்பம் தரிக்கும் என்றும் கூறியிருந்தார்.



 


இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மயில்கள் உடலுறவு கொள்ளுமா? கொள்ளாதா என்ற விவாதம் நடந்து வருகிறது. மயில் குறித்து ஆராய்ச்சி செய்யும் பலர் மயில்கள் உடலுறவு கொள்ளும் என்பதை வீடியோ மூலம் விளக்கி வருகின்றனர்.

இந்த நிலையில்  பாலக்காட்டில் உள்ள சூலனூர் மயில் பூங்காவில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இங்கு சுமார் 300 மயில்கள் இருப்பதால் அவை உடலுறவு கொள்வதை நேரில் பார்க்க டிக்கெட் வாங்கி கொண்டு பார்வையாளர்கள் குவிந்து வருகின்றனர். பார்வையாளர்களுக்கு மயில்களின் உடலுறவை விளக்கி கூற ஒரு அலுவலரும் அமர்த்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மயில்கள் உடலுறவு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய நீதிபதி தர்மசங்கடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.