புதன், 6 டிசம்பர் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 27 அக்டோபர் 2022 (18:36 IST)

குலாப்ஜாமூன் கிடைக்காததால் கொலை: திருமணவீட்டில் பரபரப்பு

Gulab Jamun
திருமண வீட்டில் குலாப்ஜாமுன் கிடைக்காததால் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 
 
உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள ஆக்ராவில் நேற்று நடந்த திருமண விருந்தில் குலாப்ஜாமுன் தட்டுப்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் நடந்து அது மோதலாக மாறியது 
இந்த மோதலில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டதாகவும் அவரை குறிப்பாக கொலை செய்தது யார் என்று தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. சரமாரியாக இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கியதில் அந்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது
 
 கொலையான நபர் பெயர் சன்னி என்றும் அவரது அவரது வயது 22 என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தாலும் இன்னும் யாரையும் கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva