1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Alagesan
Last Modified: செவ்வாய், 22 நவம்பர் 2016 (09:02 IST)

மருமகளின் பிரசவச் செலவுகளுக்காக வங்கிக்கு பணம் எடுக்கச் சென்றவர் பலியான சோகம்

கடந்த 13 நாட்களாக பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தின் டியோரியா நகரில் உள்ள எஸ்பிஐ வங்கி முன்பு நேற்று பொதுமக்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 60 வயது முதியவர் பலியானார்.


 


வங்கிக் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான முதியவரின் மருமகளுக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு பிரசவம் ஆனது. அவரது தொடர் சிகிச்சைக்காக வங்கிக்கு அவசரமாக பணம் எடுக்க வந்தவர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.