1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 21 நவம்பர் 2016 (17:02 IST)

செல்லாத 500 ரூபாய் நோட்டை நிவாரணமாக வழங்கிய மத்திய அரசு

இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு, தலா 5000 ரூபாய் நிவாரணம் வழங்க கோரிய உத்தரவையடுத்து, செல்லாத பழைய 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.


 

 
இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயில் உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
 
இதைத்தொடர்ந்து படுகாயமடைந்தவர்கள் அனைவருக்கும் தலா 5000 ரூபாய் நிவாரண நிதி வழங்க அறிவித்தது. இந்நிலையில் நிவாரன நிதி பெற்ற சிலர் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளனர். மத்திய அரசு கடந்த 8ஆம் தேதி செல்லாது என்று அறிவித்த 500 ரூபாய் நோட்டுகள் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.
 
இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.