1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 30 நவம்பர் 2016 (14:40 IST)

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் கிலோ 5 ரூபாய்!

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் கிலோ 5 ரூபாய்!

கடந்த 8-ஆம் தேதி பிரதமர் மோடி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். இதனையடுத்து புழக்கத்தில் இருந்த 14 லட்சம் கோடி ரூபாய் தாள்கள் மதிப்பை இழந்துள்ளன.


 
 
நாடு முழுவதும் தற்போது புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டன. இந்நிலையில் தற்போது மதிப்பை இழந்துள்ள 14 லட்சம் கோடி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
 
இந்த கேள்விக்கு ரிசர்வ் வங்கி வட்டாரத்தில் இருந்து வந்த தகவல் என ஒரு செய்தி வருகிறது. அதில், தற்போது மதிப்பை இழந்துள்ள 14 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகளை தூள் தூளாக அரைத்துவிட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்படும் என கூறப்பட்டுள்ளது.
 
இவ்வாறு மறுசுழற்சிக்கு செல்லும் ரூபாய் நோட்டுகள் அரைக்கப்பட்ட பின்னர் அவற்றை காலண்டர்கள், அட்டைகள், கோப்புகள் போன்ற அலுவலக பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும். மேலும் எரிபொருளாக பயன்படுத்தப்படும் கட்டிகளாகவும் தயாரிக்கப்பட உள்ளது. இந்த எரிபொருள் கட்டிகள் கிலோ 5 முதல் 6 ரூபாய் வரை விற்கப்படும் என கூறப்படுகிறது.