செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 13 பிப்ரவரி 2017 (18:10 IST)

தமிழகத்தில் முதலமைச்சர் பதவி காலியாக இல்லை: வெங்கையா நாயுடு

தமிழகத்தில் முதலமைச்சர் பதவி காலியாக இல்லை என மத்திய மந்திரி வெங்கையா நாயுடு சுப்ரமணியன் சுவாமிக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். 


 

 
தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகியோர் இடையே கடும் போட்டி நடந்து வருகிறது. ஆளுநர் இந்த விவகாரத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால் தமிழக அரசியல் சூழலில் நாளுக்கு நாள் பரபரப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
 
ஓ.பி.எஸ் அணிக்கு எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு 11ஆக உயர்ந்துள்ளது. சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கூவத்தூர் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி சசிகலாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார். இன்று ஆட்சி அமைக்க அழைக்கவில்லை என்றால் ஆளுநர் வழக்கு தொடருவேன் என கூறியிருந்தார்.
 
இதற்கு தமிழக பாஜக சுப்ரமணியன் சுவாமி கருத்தை பாஜக கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறப்பட்டது. இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெங்கையா நாயுடு கூறியதாவது:-
 
தமிழக கவர்னர் பாரபட்சமின்றி செயல்படுகிறார், அவருக்கு உள்நோக்கம் கற்பிக்க வேண்டாம். தமிழகத்தில் முதலமைச்சர் பதவியை நிரப்ப வேண்டியது இல்லை, முதலமைச்சர் பதவியானது காலியாக இல்லை. ஏற்கனவே முதல்-அமைச்சர் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது, என்று கூறினார்.