1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 1 ஜூன் 2017 (16:43 IST)

66 பள்ளிகளில் ஒருவர் கூட தேர்ச்சி இல்லை : ஜார்கண்ட் தேர்தல் முடிவு

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத விவகாரம் ஜார்கண்ட் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த மே மாதம் 30ம் தேதி பத்தாம் வகுப்பு மற்றும் +2 ஆகியவற்றின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதன்படி அந்த மாநிலத்தில் உள்ள 66 பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அந்த மாநிலத்தில் மொத்தம் 33 பள்ளிகளில் தேர்வு எழுதிய 240 பத்தாம் வகுப்பு மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. அதேபோல், 33 பள்ளிகளில் தேர்வு எழுதிய 148 பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை. இதில் 60 சதவீத மாணவிகள் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
 
இந்த விவகாரம், ஜார்கண்ட் மாநில கல்வி கழக தலைவர் அர்விந்த் பிரசாத் சிங்கின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.