1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2017 (06:04 IST)

வரதட்சணை புகார் கொடுத்தால் கைது செய்ய கூடாது: சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஆண்கள் மீதான வரதட்சணை புகார் வந்தால் உடனடியாக எந்தவித விசாரணையும் இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படும் நடவடிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.



 
 
இந்த நிலையில் பலர் இந்த விஷயத்தை தவறாக பயன்படுத்தியிருப்பதாக ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளதால் நேற்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
 
இதன்படி இனிமேல் வரதட்சணை புகார் தொடர்பாக போலீசார் நேரடியாக கைது நடவடிக்கையில் இறங்கக்கூடாது. மாவட்ட குடும்ப நல கமிட்டிகள் விசாரணை நடத்திய பின்னரே நடவடிக்கை எடுக்க வேண்டும். வெறும் புகாரை மட்டுமே ஆதாரமாக கொண்டு கைது செய்யக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு ஒன்று வெளியிட்டுள்ளது. இதனால் அப்பாவிகள் பலர் கைது செய்யப்படுவது தவிர்க்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.