தாவூத் இப்ராஹீம் குறித்து தகவல் அளித்தால் ரூ.20 லட்சம் சன்மானம்: என்ஐஏ அறிவிப்பு|
நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹீம் குறித்து தகவல் அறிவித்தால் 20 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுடன் தாவூத் இப்ராஹிம் தொடர்பு வைத்திருப்பதாகவும் இந்தியாவுக்கு எதிராக பல தீவிரவாத செயல்களை செய்து வருவதாகவும் தாவூத் இப்ராஹிம் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது
மேலும் இந்தியாவில் செயல்படும் ஒரு சில நிறுவனங்கள் மூலம் ஆயுதங்கள் வெடிபொருட்கள் மற்றும் கள்ளநோட்டுகள் போன்ற குற்றச்செயல்களில் தாவூத் இப்ராஹீம் ஈடுபட்டு வருவதாகவும் இதுகுறித்த தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 15 லட்சம் முதல் 20 லட்ச ரூபாய் வரை சன்மானம் வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.