ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 23 மார்ச் 2023 (20:32 IST)

உலக குத்துச்சண்டை போட்டி: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நீத்து காங்கஸ்

delhi
டெல்லியில் உலககுத்துச் சண்டை போட்டிகள் நடந்து வரும் நிலையில், இந்திய வீராங்கனை நீத்து காங்காஸ்  இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

டெல்லியில் உலகக் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், 48 கிலோ எடை பிரிவில் இன்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனையுடன்  நீத்து காங்காஸ் மற்றும் கஜகஸ்தான் வீராங்கனை ஆலுவா பால்கிபெகோவா விளையாடினர்.

இப்போட்டியில், கஜகஸ்தான் வீராங்கனை முன்னிலை பெற்ற போதிலும், 2 வது சுற்றில் அதிரடியாக விளையாடினார்.

இந்த நிலையில், கடைசி 3  நிமிடங்களில் சிறப்பாக விளையாடிய  நீத்து, சளைக்காமல் கஜகஸ்தான் வீராங்கனையும்   வெற்றி பெற முயற்சித்தார்.

இதனால் போட்டியில் இருவருக்குமிடையே பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில்,  போட்டியில் முடிவில் நீத்து -5-3 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்றதால், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இதனால் இறுதிப்போடிக்கு, நீத்து முன்னேறியுள்ளார். அவர் பதக்கம் வெல்ல வேண்டுமென்று வாழ்த்துகள் குவிந்து வருகிறது.