1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By bharathi
Last Modified: ஞாயிறு, 4 அக்டோபர் 2015 (09:13 IST)

தனியார் செய்தித் தொலைக்காட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்: வீடியோ இணைப்பு

உத்திரப்பிரதேசத்தில்  அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்ட நிகழ்ச்சியை படம் பிடிக்கச் சென்ற தனியார் செய்தித் தொலைக்காட்சி ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 
 
உத்திரப்பிரதேசத்தில் மாட்டு இறைச்சியை சாப்பிட்டதாகக் கூறி இஸ்லாமிய முதியவர் ஒருவர் பொதுமக்களால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மாட்டிற்காக மனிதனைக் கொல்வதா? என்று டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த்கெஜ்ரவாலும் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். இந்நிலையில் கொல்லப்பட்ட இஸ்லாமியரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று உத்திரப்பிரதேசம் சென்றிருந்தார்.
 
இந்நிகழ்வை படம் பிடிக்க பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சி ஊழியர்கள் குழு காரில் சென்றது. அப்போது செய்திக் குழுவை சூழ்ந்து கொண்ட சில பெண்கள், அவர்கள் வந்த காரின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். மேலும்  கேமராவும்  சூறையாடப்பட்டன. இதை தடுக்க முயன்ற கேமரா மேனும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்.
 
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று வர்ணிக்கப்படும் ஊடகவியலாளர்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.