1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 14 ஜூலை 2017 (15:56 IST)

கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் - தேசிய மகளிர் ஆணையம் அதிரடி

பாலியல் தொல்லை  தொடர்பாக  நடிகையின் பெயரை குறிப்பிட்டு கமல்ஹாசன் கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்துள்ளது.


 

 
கேரளளாவில் பிரபல நடிகை , கடந்த பிப்ரபவரி மாதம் காரில் கடத்தப்பட்டு, பலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
பாதிக்கப்பட்டவர் என்ற முறையில், நடிகை விவகாரத்தில், அவரது பெயரை பயன்படுத்தி செய்தி வெளியிடக்கூடாது என நீதிமன்றம் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளது. அந்நிலையில், சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் “நடிகை கடத்தல் வழக்கில் சட்டமும், நீதியும் சரியாக செயல்பட்டிருக்கிறது ” என கருத்து தெரிவித்திருந்தார். 
 
இந்நிலையில், இந்த விவகாரத்தை கையில் எடுத்த தேசிய மகளிர் ஆணையம், பாலியல் தொல்லை  தொடர்பாக  நடிகை பெயரை குறிப்பிட்டு பேசியதாக கமல்ஹாசன் மீது புகார் கூறியுள்ளது. மேலும், இது தொடர்பாக விளக்கம் கேட்டு நடிகர் கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்புவோம் எனவும் அறிவித்துள்ளது.
 
ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக, கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என தமிழகத்தில் சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரத்திலும் கமல்ஹாசனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.