1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 22 ஏப்ரல் 2021 (13:09 IST)

பொதுமக்களுக்கு ஆக்சிஜன் வழங்க சொந்த காரை விற்ற நபர்! குவியும் பாராட்டுக்கள்

பொதுமக்களுக்கு ஆக்ஸிஜன் சப்ளை செய்வதற்காக தன்னுடைய சொந்த காரை விற்பனை செய்த நபர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது
 
நாடு முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மும்பையை சேர்ந்த ஷானாவாஸ் ஷேக் என்பவர் தன்னுடைய 22 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை விற்று அந்த பணத்தில் ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வாங்கி ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறார் 
 
இதற்காகவே அவர் டீமை ஏற்பாடு செய்து போன் மூலம் உதவி கேட்கும் நோயாளிகளுக்கு அவர் ஆக்சிஜன் சிலிண்டர்களை சப்ளை செய்து வருகிறார். இதுவரை அவர் 4 ஆயிரம் பேர்களுக்கு சிலிண்டர் சப்ளை செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது