புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: புதன், 28 ஜூன் 2017 (04:44 IST)

பெண் கைதியின் பிறப்ப்புறுப்பில் லத்தி: அடித்தே கொன்ற சிறை காவலர்கள்

மும்பையில் உள்ள ஒரு பெண் கைதியின் பிறப்புறுப்பில் லத்தியை விட்டு கொடுமையான சித்திரவதை செய்து சிறைக்காவலர்களே கொலை செய்ததாக வெளிவந்துள்ள செய்தி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது



 


மும்பை பெண் சிறையில் தண்டனை வகித்து வந்த மஞ்சுளா என்ற பெண், வழக்கமாக தனக்கு வழங்கப்படும் 5 ரொட்டிகள் வழங்கப்படவில்லை என்று சிறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறைக்காவலர்கள் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று அங்கு கொடுமைப்படுத்தியுள்ளனர்.

உச்சகட்டமான அந்த பெண்ணை நிர்வாணமாக்கி பிறப்புறுப்பில் லத்தியை விட்டுள்ளனர். இதனால் ரத்த வெள்ளத்தில் மயங்கிய மஞ்சுளா, சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் மற்ற கைதிகள் அதிர்ச்சி அடைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடந்து வருவதாகவும், சம்பந்தப்பட்ட சிறைக்காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.