செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (13:28 IST)

பெற்றோர்களே உஷார்; உங்கள் குழந்தையின் உயிரை பலி கேட்கும் சூசைடு கேம்

புளூ வேல் சூசைடு சேலஞ்ச் என்ற இணையதள விளையாட்டு உலகம் முழுவதும் 18 நாடுகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட சிறுவர்களை தற்கொலை செய்துக்கொள்ள தூண்டியுள்ளது.


 

 
புளூ வேல் சூசைடு சேலஞ்ச் என்ற இணையதள விளையாட்டு உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த விளையாட்டை ரஷ்ய சேர்ந்த நபர் ஒருவர் வடைமைத்துள்ளார். இதற்காக அவர் கடந்த ஆண்டு ரஷ்ய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்த விளையாட்டால் உலகம் முழுவதும் 18 நாடுகளில் இதுவரை சுமார் 200க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.
 
கடந்த மாதம் இந்தியாவில் மும்மை பகுதியில் 10வயது சிறுவன் இந்த விளையாட்டை விளையாடி தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியால் இது முதல் பலி. இந்த கேம் விளையாடுபவர்களுக்கு தினமும் ஒரு டாஸ்க் கொடுக்கப்படும். ஒவ்வொரு டாஸ்கிலும் கைகளை அறுத்துக்கொள்ளுதல், நள்ளிரவில் பேய் படம் பார்பது. மொட்டை மாடி சுவரில் ஏறி நின்று பாடல் கேட்பது போன்ற டாஸ்க் கொடுக்கப்படும்.
 
இறுதியாக 50வது நாளில் தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்படும். இந்த விளையாட்டை விளையாடி பலியான சிறுவர்கள் எல்லோரும் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது வேதனைக்குரியது.
 
மும்பையில் இறந்த சிறுவன் குறித்து அவனது பெற்றோர், கடந்த சில நாட்களாகவே அவனது நடவடிக்கையில் மாற்றம் இருந்தது. ஆனால் அவன் தற்கொலை செய்துக்கொள்ளும் நிலைக்கு செல்வான் என்பது தெரியாமல் போனது என்றனர். மேலும் சிறுவன் தற்கொலை செய்துக்கொள்ளும் முதல் நாள் பள்ளியில் தனது நண்பர்களிடம் நாளை வரமாட்டேன் என கூறியுள்ளான்.