காங்கிரஸ் எம்பி இருக்கையில் கட்டுக்கட்டாக பணம்! நாடாளுமன்றத்தில் பரபரப்பு..!
நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி உட்கார்ந்திருந்த இருக்கையில் கட்டு கட்டாக பணம் எடுக்கப்பட்டதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இன்று நாடாளுமன்ற மாநிலங்கள் அவை கூடியதும், முக்கிய அறிவிப்பு ஒன்றை மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் வெளியிட்டார்.
நேற்றைய நாடாளுமன்றம் கலைந்தவுடன், வழக்கமான சோதனைகள் செய்யப்பட்டபோது, காங்கிரஸ் எம்பி அபிஷேக் மனு சிங்வி என்பவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் கட்டு கட்டாக பணத்தை பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இந்த விவகாரம் குறித்து என்னிடம் தெரிவிக்கப்பட்டதாகவும், உடனே இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் சார்பில், அபிஷேக் மனு சிங் என்பவர் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் உட்கார்ந்த இருக்கையில் கட்டு கட்டாக பணம் கண்டெடுக்கப்பட்ட விவகாரம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
Edited by Mahendran