வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 22 ஜூலை 2016 (17:31 IST)

39 மனைவிகளுடன் பிறந்த நாளை கொண்டாடிய மன்மத தாத்தா!

மிசோரம் மாநிலத்தில் 72 வயதான முதியவர் ஒருவர் 38 மனைவிகளுடன் வசித்து வருகிறார். அவர் தனது பிறந்த நாளை தனது 39 மனைவிகள், 94 பிள்ளைகள், 33 பேரக்குழந்தைகளுடன் நேற்று கொண்டாடிடானார்.


 
 
72 வயதான சியோனா சனா தனது முதல் திருமணத்தை 1959-ஆம் ஆண்டு தனது 15-ஆம் வயதிலும், தனது கடைசி திருமணத்தை 2004-ஆம் ஆண்டு தனது 60-ஆவது வயதிலும் செய்துகொண்டார்.


 
 
மிசோரம் மாநிலம் பக்தவாஸ் தஸ்க்நுக் கிராமத்தை சியோனாவின் குடும்பம் தான் உலகிலேயே மிகப்பெரிய குடும்பம் என கூறப்படுகிறது. இந்த மிகப்பெரிய குடும்பத்தை பார்க்க அந்த கிராமத்திற்கு நிறைய பேர் வருவதால், கிராமமே சுற்றுலாத் தளமாக உள்ளது.