1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Updated : புதன், 19 அக்டோபர் 2016 (13:01 IST)

மர்ம உறுப்பில் பெட்ரோல் ஊசி: எதற்கு தெரியுமா?

மர்ம உறுப்பில் பெட்ரோல் ஊசி: எதற்கு தெரியுமா?

உத்தரபிரேதசத்தில் செல்போன் திருடியதாக கூறி மூன்று சகோதரர்களுக்கு மர்ம உறுப்பில் ஊசி போட்டுள்ளனர். ஊசியில் பெட்ரோலை நிரப்பி போட்டதால் அவர்களின் மர்ம உறுப்பு முற்றிலுமாக சேதமடைந்துள்ளது.


 
 
லோனி பகுதியில் உள்ள சமாஜ்வாதி கட்சி பிரமுகர் ஹாஜி இசான் குரேசியின் சகோதரர் ரிஸ்வான் குரேசியின் பண்ணை வீட்டில் செல்போன் ஒன்று திருட்டு போய் உள்ளது. அவர்களுக்கு 16, 17, 24 வயதுடைய சகோதரர்கள் மீது செல்போன் திருடியதாக சந்தேகம் எழுந்துள்ளது.
 
இதனையடுத்து எஇஸ்வான் குரேசி தனது நண்பர்களுடன் சென்று அந்த 3 பேரையும் அடித்து உதைத்துள்ளார். ஆனால் தாங்கள் செல்போன் திருடவில்லை அவர்கள் கூறியும் விடாமல் அவர்களை தாக்கியுள்ளார் ரிஸ்வான்.
 
பின்னர் ஊசியில் பெட்ரோலை நிரப்பி மூன்று பேரின் மர்ம உறுப்பில் போட்டுள்ளர். இதனால் பாதிக்கப்பட்ட 16, 17 வயது சிறுவர்கள் டெல்லி மருத்துவமனையிலும், 24 வயது வாலிபர் லோனி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
சிறுவர்களின் மர்ம உறுப்பு முற்றிலும் சேதமடைந்துள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து போலீசார் ரிஸ்வான் குரேசி உட்பட அவனது நண்பர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.