செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Updated : வியாழன், 1 செப்டம்பர் 2016 (17:57 IST)

’மக்கள் பணம் விளையாடுது’ - 8 கோடிக்கு சமோசா வாங்கிய அமைச்சர்கள்!

உத்தரப்பிரதேச மாநிலத்தில், அகிலேஷ்யாதவ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.


 


இந்நிலையில், அம்மாநிலத்தின் அமைச்சர்களை சந்திக்க வருபவர்களுக்கு டீ, சமோஷா, குலாப் ஜாமூன் உள்ளிட்டவற்றை அளிக்க அரசு சார்பில் நாள் ஒன்றிற்கு 2500 கொடுக்கப்படுகிறதாம். இதனால் கடந்த 4 வருடத்தில்  ரூ. 8.78 கோடி செலவாகியுள்ளதாக முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.

அதிகபட்சமாக அமைச்சர் அருண்குமார் கோரி ரூ.22.93 லட்சமும், கைலாஷ் சவுராஷியா ரூ.22.86 லட்சமும் செலவு செய்துள்ளனர். அதே நேரம் அமைச்சர் சிவ்பால் யாதவ் ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.