புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (14:46 IST)

பாதிப்பை பார்க்க சென்று வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர்! – ஹெலிகாப்டர் மூலமாக மீட்பு!

மத்திய பிரதேசத்தில் மழை பாதிப்புகளை காண சென்ற அமைச்சர் வெள்ளத்தில் சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக வட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் மத்திய பிரதேசத்தில் பல பகுதிகளில் நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டுள்ளன. மத்திய பிரதேசம் மாநிலம் தடியா மாவட்டத்தில் ஏற்பட்ட மழை பாதிப்புகளை காண உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா சென்ற நிலையில் அப்பகுதியில் வெள்ளம் வந்ததால் அதில் அவர் சிக்கி கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த பேரிடர் மீட்பு குழு உடனடியாக அவ்விடத்திற்கு விரைந்து ஹெலிகாப்டர் மூலமாக கயிறு போட்டு அமைச்சரை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.