1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 4 பிப்ரவரி 2021 (18:20 IST)

துணை மருத்துவப் படிப்புகளுக்கு ஆன்லைனில் கலந்தாய்வு: தேதி அறிவிப்பு!

துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு பிப்ரவரி 9ஆம் தேதி முதல் ஆன்லைனில் நடைபெறும் என சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு எப்போது நடைபெறும் என்ற கேள்வி இருந்த நிலையில் சற்றுமுன் இந்த கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளி வந்துள்ளது. துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு பிப்ரவரி 9ஆம் தேதி முதல் ஆன்லைனில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மொத்தமுள்ள 22,910 இடங்களுக்கு 37,334 பேர் விண்ணப்பம் செய்திருப்பதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ள இந்த அறிவிப்பை அடுத்து துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு செய்பவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள்