மவோயிஸ்ட் தாக்குதலில் 11 பாதுகாப்பு படை வீரர்கள் பலி - சத்தீஷ்கரில் அதிர்ச்சி
சத்தீஷ்கர் மாநிலம் சுக்மா பகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் 11 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகியுள்ளனர்.
அந்த பகுதியில் பதுங்கியுள்ள மாவோயிஸ்டுகளை தேடிக் கண்டுபிடிக்கும் வேலையில் பாதுகாப்புப் படையினர் இன்று ஈடுபட்டிருந்தனர்.
பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக பாதுகாப்பு படையினர் மீது மாவோயிஸ்டு துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதில், 11 பாதுகாப்பு படை வீரர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 4 வீரர்கள் பலத்த காயம் அடைந்தனர்.
இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.