வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2016 (13:33 IST)

’அதிர்ச்சி’ – பல பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டும் நிர்வாக இயக்குனர்

’அதிர்ச்சி’ – பல பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டும் நிர்வாக இயக்குனர்

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள எம்.ஜி.ரோட்டில், ரகஜா என்று ஒரு பிரபலமான கட்டிடத்தில் ”மை ஃபேமிலி ஹெல்த் ஆப்ஷன்ஸ்” (My Family Health Options) என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.


 
இந்த தனியார் கன்சல்டன்சி நிறுவனம், மருத்துவம், ஆரோக்கியம் தொடர்பானதாகும். இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருக்கும் பானுபிரகாஷுக்கு எதிராக அவரது நிறுவனத்தில் பணிபுரியும் மூன்று பெண்கள் இணைந்து காவல் ஆணையரிடம் அதிர்ச்சியளிக்கு புகார் ஒன்றை கொடுத்துள்ளனர்.

அந்த புகாரில், “பானுபிரகாஷ் , அலுவலக சுற்றுப் பயணம் எனக் கூறி வெவ்வேறு தருணங்களில் எங்களை தனித்தனியாக அழைத்து சென்றார். அப்போது ஹோட்டல் அறையில், தங்கி இருந்த எங்களுக்கு மயக்க மருந்தை கொடுத்து, பானு பிரகாஷ் பலாத்காரம் செய்தார். அதை அவர் வீடியோவாகவும் எடுத்து வைத்து, எங்களை, அவர் ஆசைக்கு இணங்கும்படி தொடர்ந்து மிரட்டி வருகிறார்.

பல பெண்களை டெலி-காலர் பணிக்கு எடுத்து, அவர்களுக்கு பயிற்சி அவசியம் என்று ஒரு விதிமுறையை புகுத்தி, பயிற்சிக்கு வர வைத்து அவர்களையும் பானுபிரகாஷ் பலாத்காரம் செய்துள்ளார்.” என்று கூறுயுள்ளனர்.

இந்நிலையில், பானுபிரகாஷ் தலைமறைவாகியுள்ளார், அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.