1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified புதன், 6 ஜூலை 2022 (12:45 IST)

உடலுறவின்போது ஏற்பட்ட மாரடைப்பு: பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!

sex
மகாராஷ்டிர மாநிலத்தில் உடலுறவின் போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இளைஞர் ஒருவர் பரிதாபமாக மரணம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தோழியுடன் உடலுறவு கொள்ளும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தபோது முதல்கட்ட விசாரணையில் இளைஞர் மது அருந்தி இருக்கலாம் என்று தெரிகிறது.
 
மேலும் அவரது சட்டைப்பையில் இருந்து வயாகரா மாத்திரைகள் அதிகமாக கண்டெடுக்கப்பட்டதாகவும் விசாரணையில் போலீசார் தெரிவித்தனர். இது குறித்து மேலும் விசாரணை செய்து வருவதாகவும் உயிரிழந்த இளைஞருடன் உடலுறவு கொண்ட பெண் தோழியிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.