1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 28 ஜனவரி 2022 (08:27 IST)

இனி சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்பனை: அரசு அறிவிப்பு

இனி சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்பனை: அரசு அறிவிப்பு
இனி சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்பனை செய்யப்படும் என மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்பதற்கு அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
பழச்சாறு மூலம் தயாரிக்கப்படும் ஒயின் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நவாப் மாலிக் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
ஒரு பக்கம் மதுவை ஒழிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்னொரு பக்கம் சூப்பர் மார்க்கெட்டுகளில் ஒயின் விற்பதற்கு மகாராஷ்டிர மாநில அரசு அனுமதி அளித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.