மாஸ்க்கின் விலையை நிர்ணயித்த முதல் மாநிலம் – மக்கள் நிம்மதி!
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநில அரசு டிரிபிள் லேயர் மாஸ்க்குகளின் விலையை 4 ரூபாய் என நிர்ணயித்துள்ளது.
கொரோனா காரணமாக மாஸ்க் என்பது மக்களின் அத்தியாவசியப் பொருட்களில் ஒன்றாகி விட்டது. ஆனால் இதைப் பயன்படுத்திக் கொண்டு மாஸ்க் நிறுவனங்கள் 10 ரூபாயில் ஆரம்பித்து 200 ரூபாய்க்கு மேல் வரை மாஸ்க்குகளை விற்று கல்லா கட்டி வருகின்றனர். இதுவரை மாஸ்க்குகளுக்கு என்று அடிப்படை விலை நிர்ணயம் செய்யப்படவில்லை.
இந்நிலையில் இந்தியாவிலேயே முதல் முறையாக மகாராஷ்டிர மாநில அரசு மாஸ்க்குகளின் விலையை 4 ரூபாய் என நிர்ணயித்துள்ளது. மேலும் N 95 மாஸ்க்குகளில் V வடிவ N -95 மாஸ்க் (N-95 Mask) விலை ரூ .19 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. N-95 3D மாஸ்க் (N-95 3D Mask) விலை ரூ.25 ஆகவும், N-95 மாஸ்க் (Without Venus) ரூ.28 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.