1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 3 ஜனவரி 2018 (12:16 IST)

லாலு பிரசாத்திற்கு என்ன தண்டனை? - தீர்ப்பு விவரம் நாளை அறிவிப்பு

கால்நடை தீவன வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லால் பிரசாத் உள்ளிட்ட 15 பேருக்கான தண்டனை விவரங்கள் நாளை அறிவிக்கப்படவுள்ளது.

 
பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனத தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் பீகார் முதல் அமைச்சராக  இருந்த போது (1991 முதல் 1994 வரை) கால்நடைத் தீவனம் வாங்கியதில், அரசு கருவூலத்தில் இருந்து 960 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
 
அதாவது, பீகாரில் உள்ள பல அரசு கரூவூலங்களிலிருந்து பணம் எடுக்கப்பட்டு முறைகேடு செய்யப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. அதில், தியோஹர் அரசு கருவூலத்தில் இருந்து ரூ.89 லட்சம் முறைகேடு செய்ததாக ஒரு வழக்கு தொடரப்பட்டது.  
 
அந்த வழக்கில் கடந்த டிசம்பர் 23ம் தேதி தீர்ப்பு வெளியானது. தீர்ப்பு வழங்கிய நீதிபதி லாலு பிரசாத் உட்பட 15 பேரும் குற்றவாளி என தீர்ப்பளித்தார். மேலும், தண்டனை விவரம் 2018ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி தெரிவிக்கப்படும் எனக் கூறியிருந்தார். அதையடுத்து லாலு உட்பட மற்ற அனைவரும் ராஞ்சியிலுள்ள பிர்ஸா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
இந்நிலையில், லாலு உள்பட 15 பேருக்குமான தண்டனை விபரங்கள் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த விவரங்களை நாளை அறிவிக்கிறேன் என நீதிபதி கூறிவிட்டார்.