வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (17:59 IST)

கொல்கத்தாவில் பாலம் இடிந்து விபத்து; இடிபாடுகளுக்குள் சிக்கிய கார், இருசக்கர வாகனங்கள்

கொல்கத்தாவில் பழைய மேம்பாலம் ஒன்று சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

 
Thanks: ANI

கொல்கத்தா புறநகர் பகுதியில் மேமின்பூர் - தராடலா இடையே உள்ள மேம்பாலம் சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
உயிரிழப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கி இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியை தொடங்கியுள்ளனர்.
 
இடிபாடுகளுக்குள் பஸ், கார், இருசக்கர வாகனம் உள்ளிட்டவை சிக்கியுள்ளதால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்துள்ளனர்.