எம்.எல்.ஏவுக்கும் கலெக்டருக்கும் காதல்: விரைவில் டும் டும் டும்
காதல் ஒன்றுதான் ஜாதி, மத, இனம் என்று எந்த பிரிவினையையும் தாண்டி ஜெயிக்க கூடியது. இந்த காதல் பதவிகளையும் பார்ப்பதில்லை. இந்த நிலையில் கேரளாவில் ஐஏஎஸ் முடித்து துணை கலெக்டராக பணிபுரியும் ஒரு பெண், எம்.எல்.ஏ ஒருவரை காதலித்து வருகிறார். விரைவில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெறவுள்ளது.
கேரள மாநிலம் அருவிக்கரா சட்டமன்ற தொகுதி உறுப்பினரான சபரிநாதன் என்பவர் சமீபத்தில் அதே மாநிலத்தில் துணை கலெக்டராக பணியாற்றி வரும் திவ்யாவை பணி நிமித்தம் சந்தித்தார். இருவரும் பேசியபோது இருவருக்கும் பல விஷயங்களில் ஒத்து போனது தெரியவந்தது. எனவே இருவரும் ஒருவரை ஒருவர் மனதை பறிகொடுத்து விரும்ப தொடங்கினர்
இதுகுறித்து எம்.எல்.ஏ சபரிநாதன் தனது ஃபேஸ்புக்கில் கூறியபோது, ' ”நான் முதன்முதலாக திவ்யாவை திருவனந்தபுரத்தில் சந்தித்தேன். அப்போது இருவரும் பல விஷயங்களில் ஒரே மாதிரியான கருத்துகள் கொண்டிருப்பது தெரிந்தது. இரு வீட்டாரின் ஆசிர்வாதத்தோடு,திவ்யா எனது வாழ்க்கைத் துணையாக இருக்கிறார்.” என தெரிவித்துள்ளார்.
சபரிநாதன் எம்.எல்.ஏவாக இருந்தாலும் அவர் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி. இவரது தந்தை ஜி.கார்த்திகேயன் என்பவர் சட்டமன்ற சபாநாயகராக இருந்தவர். அவரது மறைவிற்கு பின்னர் அரசியலில் குதித்து அருவிக்கரா தொகுதியின் எம்.எல்.ஏவாக உள்ளார்.
அதேபோல் கடந்த 2014-ஆம் ஆண்டு ஐ.ஏ.ஏஸ் முடித்த திவ்யா, 2016-ஆம் ஆண்டு கோட்டயம் மாவட்ட துணைக் கலெக்டராக உள்ளார். திவ்யா கலெக்டராக மட்டுமின்றி சமூக சேவையிலும் அக்கறை கொண்டவர். வாக்களிக்க வேண்டியதான் அவசியம் குறித்து இவர் இசையமைத்து, பாடிய பாடல் நல்ல வரவேற்பை பெற்று, அவரை பிரபலப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.