1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 14 நவம்பர் 2022 (18:09 IST)

கேரள முதல்வர் பினராயி விஜயன் புதிய சாதனை !

கேரள மாநில முதல்வர் நீண்ட நாட்களாக முதல்வராக இருந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

கேரள மாநிலத்தில் முதல்வர் பின்ராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி நடந்து வருகிறது.

இங்கு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை காங்கிரஸ் கட்சியும் அடுத்த முறை மார்க்கிஸ்ட் கட்சியும் மாறி மாறி ஆட்சிக்கு வருவது வழக்கம்.

ஆனால், கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில், கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது. எனவே, பினராயி விஜயன் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து, அவர் ஆட்சியின் பல விமர்சனங்கள் எதிர்க்கட்சிகள் எழுப்பினாலும், கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த அம்மா நில சட்டமன்றத் தேர்தலிலும், பினராயின் விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கட்சி 99 இடனங்களில் வெற்றி பெற்று, இரண்டாம் முறை தொடர்ச்சியாக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது.

2020 ஆம் ஆண்டு பரவிய கொரோனா காலத்தில் அவரது அரசு திறமையாக செயல்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கேரள மாநிலத்தில் அதிக நாட்கள் முதல்வராக இருந்தவர் என்ற சாதனையை அச்சுதமேனன்( 1970- 1977- மொத்தம் 2,364 நாட்கள்)  வைத்திருந்த  நிலையில், இந்த சாதனை முறித்து, அதிக நாட்கள் முதல்வராக இருந்தவர் என்ற புதிய சாதனை படைத்துள்ளார் பினராயி விஜயன். இவர் 2,364 நாட்களை இப்பதவில் நிறைவு செய்ததுள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj