1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்
Written By Muthukumar
Last Updated : வெள்ளி, 11 ஏப்ரல் 2014 (10:17 IST)

டெல்லி ஆட்சியை கை கழுவியது தவறு - கெஜ்ரிவால் கடைசியாக ஒப்புதல்!

டெல்லியில் முதல்வராக பொறுப்பேற்ற அரவிந் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி 49 நாட்களில் அல்பாயுசில் முடிந்தது குறித்து கடைசியாக கெஜ்ரிவால் 'தவறு' என்று ஒப்புக் கொண்டுள்ளார்.
ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இது குறித்து அவர் கூறியுள்ளார்.
 
"எங்களுடைய முடிவின் திடீர்த் தன்மையும், வெகுஜன மக்களிடையே சரியாக தொடர்பு கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டதை, பாஜக-வும், காங்கிரசும் பயன்படுத்தி எங்களைப் பற்றி தவறான கருத்துக்களை பரப்ப வித்திட்டது, எங்களை தப்பிப்புவாதிகள் என்று பெயரிட வைத்துள்ளது, இது நாங்கள் செய்த தவறு, எதிர்காலத்தில் இன்னும் எச்சரிக்கையுடன் செயல்படுவோம்" என்று கூறியுள்ளார் கெஜ்ரிவால்.
 
ஆனாலும் ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை உருவாக்க முடியாமல் போனதற்காக ஆட்சியை விட்டிறங்கியது குறித்து அவர் உடன்பாடான மன நிலையிலேயே இருப்பதாக தெரிகிறது.
 
பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை நேரடியாக எதிர்ப்பதால் நடுத்தர வர்க்கத்தினரில் தனக்கு ஆதரவாக இருந்த பலர் இப்போது தன்னை விட்டு விலகியிருப்பதாக கூறியுள்ள கெஜ்ரிவால் அதனால் கவலையில்லை இவர்கள் எண்ணிக்கையில் மிக குறைவு என்றார்.