1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 28 செப்டம்பர் 2016 (10:45 IST)

ஃபேஸ்புக்கில் தேச விரோத கருத்து: மாணவரை போலீஸில் ஒப்படைத்த கல்லூரி நிர்வாகம்

ராஜஸ்தான் மாநிலத்தில் காஷ்மீர் சேர்ந்த மாணவர் ஒருவர் தனது முகநூலில் தேச விரோத கருத்து தெரிவித்ததை அடுத்து கல்லூரி நிர்வாகம் அவரை காவல்துறையினரிடம் ஒப்படைத்தது. 


 

 
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் டெக்னோ இந்தியா என்.ஜே.ஆர். இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி என்ற தனியார் கல்லூரியில் காஷ்மீரை சேர்ந்த 15 மாணவர்கள் படித்து வருகிறார்கள். அவர்களில் ஸ்ரீநகரை சேர்ந்த முதாசிர் ரஷித் என்பவரும் படித்து வருகிறார்.
 
இவர் உரி ராணுவ முகாம் தாக்குதல் பற்றி தனது முகநூல் பக்கத்தில் தேச விரோத கருத்துகளை வெளியிட்டு இருந்தார். அதுபற்றி கல்லூரியில் மாணவ்ர்கள் சிலர் நிர்வாகத்திடம் புகார் செய்தனர். 
 
அதைத்தொடர்ந்து முதாசிர் ரஷித் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும், கல்லூரியில் இருந்து ஒரு வாரத்துக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.