1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 11 பிப்ரவரி 2016 (13:17 IST)

காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஹனுமந்தப்பா மரணம்

காஷ்மீர் மாநிலம் சியாச்சியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்ட கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ஹனுமந்தப்பா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


 

 
காஷ்மீர் மாநிலம் சியாச்சியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய பத்து இந்திய வீரர்களைக் புதையுண்டு பேகினர்.
 
இதைத் தொடர்ந்து, ராணுவமும் விமானப் படையின் தேடுதல் அணிகளும் மோப்ப நாய்களின் உதவியுடன் அவர்களை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
 
இவர்களில் 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஹனுமந்தப்பா என்ற வீரர் மட்டும் 6 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.
 
அவர் மைனஸ் 40 டிகிரி குளிரில் 6 நாட்களாக இருந்ததால், அவரது உடலின் பல்வேறு பாகங்கள் செயலிழந்து கோமா நிலையில் இருந்தார்.
 
அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்தால், அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
 
இந்நிலையில், அவர் உயிர்பிழைக்க வேண்டும் என்று நாடு முழுவதும் ஏராளமானவர்கள் பிரார்த்தனை செய்தனர்.
 
இந்நிலையில், அவருக்கு சிறுநீரகம் செயலிழந்திருந்ததாலும், நிமோனியா தாக்கியிருந்ததாலும், அவர் தொடர்ந்து கோமாவில் இருந்ததாலும், அவரை காப்பாற்றுவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தன.
 
இந்நிரையில் அவர் இன்று காலை 11.45 மணியளவில் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.