1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 9 செப்டம்பர் 2016 (01:25 IST)

தமிழக பதிவு எண் கொண்ட லாரிகள் மீது தாக்குதல் - கன்னட அமைப்பினர் அட்டூழியம்

தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் முடிவெடுத்ததை அடுத்து அங்குள்ள கன்னட அமைப்பினர் நடத்திய போராட்டத்தின் ஒரு பகுதியாக தமிழக பதிவு எண் கொண்ட லாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
 

 
காவிரியில் இருந்து தினசரி 15 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இதனையடுத்து, ’உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீற முடியாது. எனவே தமிழகத்திற்கு விரைவில் தண்ணீர் திறக்கப்படும். அதேநேரம், கர்நாடக விவசாயிகளுக்கும் பாதிப்பில்லாத வகையில் தண்ணீர் திறக்கப்படும்’ கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா தெரிவித்தார்.
 
இதனிடையே, கர்நாடக அரசின் முடிவைக் கண்டித்தும், முதல்வர் சித்தராமய்யா ராஜிநாமா கோரியும், புதன்கிழமை முதல் தீவிரப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக விவசாய சங்கம் மற்றும் கன்னட அமைப்புக்கள் அறிவித்தன.
 
இதனையடுத்து கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றன. தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக் கூடாது என்று கூறி பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர்.
 
இதன் ஒரு பகுதியாக மாண்டியாவில் தமிழக பதிவு எண் கொண்ட லாரிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் லாரியின் கண்ணாடிகள் நொறுங்கன. மேலும் லாரியின் டயர்களில் உள்ள காற்றை பிடிக்கிவிட்டு, அந்த டயர்களை கழற்றி தீ வைத்து எரித்தனர்.