1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (19:39 IST)

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம்: ஐ.நா அறிக்கையில் தகவல்

இந்தியாவில் அடுத்த 35 ஆண்டுகளில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும் என்று ஐ.நா தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.


 
 
அதிவேகமாக உயர்ந்து வரும் மக்கள்தொகை காரணமாக, அடுத்த 35 ஆண்டுகளில் இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் கடுமையாக நிலவும் என்று ஐ.நா-வின் ஆசிய பிராந்திய மனிதவள வளர்ச்சி அமைப்பு தனது அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
 
இந்நிலையில், கிராமங்களிலிருந்து நகரத்திற்கு குடி பெயர்பவர்கள் அதிகமாகி வருவதோடு, குறைவான சம்பளம் வாங்கும் அதிக மக்கள்தொகையை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.
 
இதைத்தொடர்ந்து, தொழில் மற்றும் உற்பத்தித்துறையில் அதிக கவனம் செலுத்தினால் மட்டுமே இந்தியாவால் 
வேலையில்லா திண்டாட்ட நிலையை மாற்ற முடியும் என்றும், உற்பத்தித்துறையில் 15% ஜி.டி.பி. மட்டுமே கொண்டுள்ள இந்தியா, 11% வேலை வாய்பை மட்டுமே வழங்கியுள்ளது என்றும், ஐ.நா-வின் ஆசிய பிராந்திய மனிதவள வளர்ச்சி அமைப்பு கருத்து தெரிவித்தது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்