வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 21 அக்டோபர் 2016 (16:56 IST)

ஜியோ இலவச சேவை டிசம்பர் 3ம் தேதி வரை மட்டுமே! - ட்ராய் உத்தரவால் பொதுமக்கள் அதிர்ச்சி

ஜியோ சிம் கார்டுகளின் இலவச அழைப்புச் சேவைக்கு, வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி வரை மட்டுமே அனுமதி என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிவித்துள்ளது.
 

 
முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதிரடி அறிவிப்புகளுடன் 4ஜி சேவையை சமீபத்தில் தொடங்கியது. ஜியோ அறிவித்த 4ஜி சிம் கார்டுகளுடன் அறிமுக சலுகையை அறிவித்தது.
 
அதன்படி அதிவேக இண்டர்நெட், அன்-லிமிட்டெட் ஹெச்டி வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் மற்றும் அன்-லிமிட்டெட் எஸ்எம்எஸ் போன்றவற்றை 90 நாட்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றது.
 
இந்நிலையில், ஜியோ வழங்கும் இலவச அழைப்பு உள்ளிட்ட சேவைகளுக்கு டிசம்பர் 3ஆம் தேதி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்று, இந்திய தொலைத்தொடர்பு சேவை ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அறிவித்துள்ளது.
 
தொலைத்தொடர்புச் சேவை விதிமுறைகளை மீறும் வகையில் ஜியோ செயல்படுவதால், அதனை 90 நாள் சலுகை அறிவிப்பு என்ற காலத்தை கடந்து, அனுமதிக்க முடியாது என்றும் டிராய் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு ஜியோ சிம் கார்டுகளைப் பெற்ற பொதுமக்களுக்கு ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.