16 வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த பாஜக எம்.எல்.ஏ. மகன்


லெனின் அகத்தியநாடன்| Last Modified வெள்ளி, 1 ஜூலை 2016 (17:07 IST)
11 வயது சிறுமியை திருமணம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பாஜக எம்.எல்.ஏ. மகன் மீது, 2 ஆண்டுகளுக்குத் தன்னை திருமணம் செய்து கொள்வதாக பாலியல் தொடர்பு கொண்டதாக மேலும் ஒரு 16 வயது சிறுமி புகார் கொடுத்துள்ளார்.
 
 
பாரதிய ஜனதா கட்சியின் ஜார்கண்ட் மாநிலத் தலைவர் தாலா மராண்டி. சட்டமன்ற உறுப்பினரான இவருக்குக் கடந்த மாதம் மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவரது மகன் முன்னா மராண்டிக்கும் 11 வயது சிறுமிக்கும் கடந்த செவ்வாயன்று (ஜுன் 28) திருமணம் நடந்துள்ளது.
 
இந்தத் திருமணத்தையொட்டி புதனன்று திருமண வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அம்மாநில முதல்வர் ரகுவர்தாஸ் கலந்துகொள்வதாக இருந்தது. கடைசி நேரத்தில் அவர் பங்கேற்பதை தவிர்த்து விட்டார்.
 
இதனிடையே 16 வயது சிறுமி ஒருவர் முன்னா மராண்டி மீது கோட்டா மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளார். அதில் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி இரண்டு ஆண்டுகளாக முன்னா பாலியல் ரீதியாகப் பயன்படுத்தி வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். முன்னாவின் மோசடித் திருமணம் குறித்து ஜார்கண்ட் மாநில மகளிர் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.
 
பாஜக மாநிலத்தலைவர் தனது மகனுக்குச் சிறுமியை திருமணம் செய்து வைத்துள்ளது மற்றும் பாலியல் குற்றச்சாட்டு குறித்து மவுனம் சாதிப்பதாக மாநில பாஜக அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
 


இதில் மேலும் படிக்கவும் :