1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: செவ்வாய், 9 மே 2017 (11:42 IST)

இரும்புப் பெண் இரோம் ஷர்மிளாவுக்கு சென்னையில் திருமணம்: நீண்ட நாள் காதலரை மணக்கிறார்!

இரும்புப் பெண் இரோம் ஷர்மிளாவுக்கு சென்னையில் திருமணம்: நீண்ட நாள் காதலரை மணக்கிறார்!

மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் உருவாக்கப்பட்டது. இதனால் பெண்களும், பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டதையடுத்து இந்த ஆயுதப்படை சிறப்பு சட்டத்தை எதிர்த்து கடந்த 16 ஆண்டுகளாக இரோம் ஷர்மிளா உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வந்தார்.


 
 
இரோம் ஷர்மிளாவின் இந்த போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தாலும் அவரது கோரிக்கை இன்னமும் நிறைவேறவில்லை. இதனால் தனது 16 வருட உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு புதிய கட்சி ஒன்றை தொடங்கி தேர்தலில் போட்டியிட்டார்.
 
மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் 'மக்கள் எழுச்சி நீதிக்கூட்டணி' என்ற கட்சியை உருவாக்கி தேர்தலில் போட்டியிட்ட இரோமுக்கு வெறும் 90 வாக்குகளே கிடைத்தது. இது இந்தியா முழுவதும் பலருக்கும் அதிர்சியை அளித்தது. சொந்த மக்களாளே இரோம் வீழ்த்தப்படார் என பலரும் வருந்தினர்.
 
இதனையடுத்து இரோம் ஷர்மிளா தென் இந்தியாவின் பல பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு தான் இனி ஒரு சமூக போராளியாக மட்டுமே இருக்க விரும்புவதாக கூறினார். இந்நிலையில் இரோம் ஷ்ர்மிளா தனது நீண்ட நாள் காதலரான டெஸ்மாண்டை விரைவில் திருமணம் செய்ய உள்ளார்.
 
இரோம் சர்மிளாவின் போராட்ட குணத்தால் ஈர்க்கப்பட்ட லண்டனை சேர்ந்த டெஸ்மொண்ட் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர்களது திருமணம் சென்னையில் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.