வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 22 ஆகஸ்ட் 2021 (10:59 IST)

107 இந்தியர்கள் உட்பட 168 பேர் மீட்பு! – ஆப்கனிலிருந்து இந்தியா வந்தடைந்தனர்!

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து இந்தியர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப்படைகள் வெளியேறிய நிலையில் ஆப்கானிஸ்தானை தலீபான்கள் முழுவதுமாக கைப்பற்றியுள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியை இந்தியா தீவிரபடுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று 107 இந்தியர்கள் உட்பட 168 பேர் ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப் பட்டனர். அதை தொடர்ந்து ஆப்கனின் தோஹாவில் உள்ள 135 இந்தியர்களை தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.