1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (20:31 IST)

சீனாவுடன் போருக்கு இந்திய ராணுவம் தயாராகவுள்ளது!" - பிபின் ராவத் தகவல்

சீனாவுடன் போருக்கு இந்திய ராணுவம் தயாராகவுள்ளது
இந்தியா மற்றும் சீனா நாடுகள் இடையே பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் சீனாவுடன் போர் செய்யவும் இந்திய ராணுவம் தயாராக உள்ளது என இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் லடாக் பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்கள் இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து இரு நாடுகளின் எல்லைகளில் பதட்டத்தை தணிக்கும் முயற்சியில் இரு நாட்டு ராணுவம் மற்றும் தூதர்கள் அளவில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது 
 
இந்த பேச்சுவார்த்தையில் பெருமளவு முன்னேற்றம் ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இன்னொரு பக்கம் எல்லையில் சீனா தனது ராணுவத்தையும் குவித்து வருகிறது என்பதும் இந்தியாவும் பதிலடி கொடுத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சீனாவுடனான பேச்சுவார்த்தை தோல்வி அடையுமமானால் சீனாவுடன் போர் புரிய இந்திய ராணுவம் தயாராக இருப்பதாக முப்படைகளின் தளபதி பிபின் ராவத் அவர்கள் தெரிவித்துள்ளார் அவரது இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது