1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : ஞாயிறு, 9 பிப்ரவரி 2020 (10:20 IST)

மருந்துகளை அதிக விலைக்கு விற்றால் அபராதம் - NPPA

மருந்துகளை அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை

மருந்துகளுக்கு  அதிக விலை நிர்ணயிக்கும் மருந்து கம்பெனிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
மத்திய அரசு, மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கான வழிகாட்டலை மாற்றியமைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. 
 
இந்நிலையில், சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மிக அதிகவிலைக்கு விலையை குறிப்பிடுகிறது. இதற்கு அரசு நோட்டீஸ் அனுப்பட்டால் உரிய விளக்கம் அளிக்காமல் இருக்கிறது.
 
இதுபோன்ற நிறுவனங்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என சமீபத்தில் நடைபெற்ற NPPA ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவ்வேற்றப்பட்டுள்ளதாக தெரிகிறது.