1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 3 பிப்ரவரி 2021 (07:55 IST)

ஒரு இதயத்துக்காக செயல்பட்ட மெட்ரோ: தெலங்கானாவில் ருசிகரம்!

தெலங்கானாவில் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக இதயம் மெட்ரோ ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
தெலங்கானா மாநிலம் வாராங்கலை சேர்ந்த விவசாயி ஒருவர் மூளைச்சாவு அடைந்த நிலையில் அவரது உடல் பாகங்களை தானமாக வழங்க அவரது குடும்பத்தார் முன்வந்ததனர். அதன்படி அந்த விவசாயியின் இதயம், கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை உள்ளிட்ட எட்டு உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. 
 
இதில் இவரது இதயம் உடனடியாக வேறு ஒருவருக்கு தேவைப்பட்டதால், ஹைதராபாத் மெட்ரோ ரயில் மூலம் இதயத்தை கொண்டு செல்ல முடிவு செய்தனர். ஆம், இதயத்தை எல்பி நகர் பகுதியில் இருந்து ஜுப்ளி ஹில்ஸ் பகுதிக்கு கிரீன் சேனல் என்று கூறப்படும் தடையில்லா போக்குவரத்து மூலம் கொண்டு சென்றனர். அந்த மெட்ரோ இதயத்தை கொண்டு செல்வதற்காக மட்டுமே இயக்கப்பட்டது மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.