செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (08:38 IST)

நான் இருக்க வேறு ஒருத்தியுடன் உல்லாசமா? சிக்கி சின்னாபின்னமான 4 பொண்டாட்டிகாரன்!

தெலங்கானாவில் ஏமாற்றிய கணவனை மனைவி அடித்து இழுத்து சென்று அவனை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சமபவம் பாராட்டை பெற்று வருகிறது. 
 
தெலங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ள உட்டிக்கூறு கிராமத்தில் சம்பத் - சுல்தான்பாத் தம்பதி 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டனர். ஆனால் இருவரும் ஒன்றாக வாழவில்லை. சம்பத்  சுல்தான்பாத்தை அடித்து கொடுமைப்படுத்தி தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டான்.
 
இதனைத்தொடர்ந்து தான் பணிபுரிந்த இடத்தில் சக பணியாளராக பணிபுரியும் பெண்ணை திருமணம் செய்து குடித்தனம நடத்தி வந்தான். இதையறிந்துக்கொண்ட முதல் மனைவி சுல்தான்பாத், சம்பத் குடியிருக்கும் வீட்டிற்கு உறவினர்களோடு சென்று அவனை அடித்து உதைத்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தாள். 
 
இது குறித்து வழக்கு பதிவு செய்த கரீம்நகர் காவல் நிலைய போலீஸார் சம்பத்தை விசாரித்த போது அவன் இது போன்று 4 பெண்களை திருமணம் செய்துக்கொண்டு ஏமாற்றி வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. அவனிடம் ஏமாந்த பெண்கள் அளித்த புகாரின் பேரில் கரீம் நகர் போலீசார் சம்பத்தை கைது செய்தனர்.