வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (17:11 IST)

‘சார்க்’ மாநாட்டில் விருந்தை புறக்கணித்த மத்திய உள்துறை மந்திரி

‘சார்க்’ மாநாட்டில் விருந்தை புறக்கணித்த மத்திய உள்துறை மந்திரி

சார்க் மாநாட்டில் இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மதிய விருந்தில் கலந்துக்கொள்ளாமல் நாடு திரும்பினார்.


 

 
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ‘சார்க்’ உறுப்பு நாடுகளின் உள்துறை மந்திரிகள் மாநாடு நடைபெறுகிறது. இன்று கூட்டத்தில் பேசிய இந்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பயங்கரவாதத்திற்க்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தானை சரமாரியாக சாடினார்.
 
அவருடைய பேச்சை ஒளிபரப்பு செய்ய அனுமதிக்கப்படவில்லை. பாகிஸ்தான் நாட்டுக்கு செந்தமான பிடிவிக்கு மட்டும் அந்நாட்டு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரின் அறிமுக உரையை ஒளிபரப்பு செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. பாகிஸ்தான் தனியார் செய்தி நிறுவனங்களுக்கு கூட அனுமதி வழங்கப்படவில்லை.
 
சார்க் மாநாட்டு மதிய விருந்தில் மாநாட்டை நடத்தும் பாகிஸ்தானின் உள்துறை மந்திரி சவுதாரி நிசார் கலந்து கொள்ளவில்லை. இந்திய உள்துரை மந்திரி ராஜ்நாத் சிங்கும் மதிய விருந்தில் கலந்துக் கொள்ளவில்லை. அங்கிருந்து விமானத்தில் நாடு திரும்பினார்.