இன்று முதல் வரலாற்று சிறப்புமிக்க ஜிஎஸ்டி வரி இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இன்று அதிகாலை 12 மணிக்கு முறைப்படி இந்திய பாராளுமன்றத்தில் இந்த வரிவிதிப்பு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த வரிவிதிப்பு முறையால் எந்தெந்த பொருட்களுக்கு குறைந்த வரி, எந்தெந்த பொருட்களுக்கு அதிக வரி என்பதை பார்ப்போம்
வரிவிலக்கு பெற்ற பொருட்கள்:
பால், உப்பு, காய்கறிகள், பருப்பு வகைகள், முட்டை, மாவு, இறைச்சி, மீன், தேங்காய், லஸ்ஸி, தயிர், வெல்லம், இளநீர், பிரசாதம், தேங்காய் நார், விலங்குகள் விற்பனை, செய்தித்தாள், காது கேட்கும் கருவி, கச்சா பட்டு, பருத்தி,கல்வி, மருத்துவம், உயிர்காக்கும் ரத்தம், பதப்படுத்தப்படாத தேயிலை, பார்வையற்றோருக்கான பிரெய்லி புத்தகங்கள், குழந்தைகளுக்கான ஓவியப்புத்தகம் மற்றும் ஒருசில பொருட்கள்.
5% வரி விதிக்கப்பட்ட பொருட்கள்:
சர்க்கரை, சமையல் எண்ணெய், பால் பவுடர், குழந்தைகளுக்கான பால் பொருட்கள், பேக்கிங் செய்யப்பட்ட பனீர், முந்திரி பருப்பு, தேயிலை, வறுக்கப்பட்ட காபிக் கொட்டைகள், ரெய்சின், ரேஷன் மண்எண்ணெய், கியாஸ், செருப்பு(ரூ.500வரை), ஆடைகள் (ரூ.1000 வரை), அகர்பத்தி, தென்னைநார் விரிப்பு
18% வரி விதிக்கப்பட்ட பொருட்கள்:
பாஸ்தா, கார்ன் பிளேக்ஸ், சூப், தலைக்கு தேய்க்கும் எண்ணெய், டூத் பேஸ்ட், சோப், பிஸ்கட்ஸ், கேக், ஜாம், இன்ஸ்டன்ட் உணவுகள், மினரல் வாட்டர், ஐஸ் க்ரீம், கம்ப்யூட்டர்கள், பிரின்டர், ஏ.சி. ரெஸ்டாரன்ட்களில் சாப்பிடுதல்,
கேமிரா, ஸ்பீக்கர்,, எடை எந்திரம், சி.சி.டி.வி, ஆப்டிகர் பைபர், டிஷ்யூ பேப்பர், நோட்டுகள், உருக்கு பொருட்கள், உணவுகள் பேக்கிங் செய்யும் அலுமினியம் பாயில்பேப்பர்மூங்கில் பர்னிச்சர்ஸ், நீச்சல் குளத்தில் குளிப்பது, மசாலா பேஸ்ட், காகித கவர்கள், ரூ.500க்கும் மேலான காலணிகள்
28% வரி விதிக்கப்பட்ட பொருட்கள்:
சாக்கலேட், பான் மசாலா, குளிர்பானங்கள், பீடி, சூயிங்கம், ஆட்டோமொபைல்ஸ், மோட்டார் சைக்கிள், வாட்டர் ஹீட்டர், வாஷிங்மெஷின், ஏ.டி.எம். சேவை, வாக்கூம் கிளீனர், சேஷிங் செய்யும் எந்திரம்(டிரிம்மர்ஸ்), மொலாசஸ் , பெயிண்ட், டியோடரன்ட்ஸ், சேவிங் கிரீம், தலைக்கு அடிக்கும் டை, சன்ஸ்கீரீன், வால்பேப்பர், செராமிக் டைல்ஸ், ஹேர் கிளிப், தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் விமானம்.