ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (01:42 IST)

மாட்டிறைச்சி சாப்பிடுபவர் என்பதால் பாலியல் வல்லுறவுக்கு ஆளான இஸ்லாமிய பெண்கள்

ஹரியானாவை சேர்ந்த பெண் ஒருவர், தானும், தனது உறவுக்கார சிறுமியும் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.
 

 
கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி மேற்கு ஹரியானாவை அடுத்த மேவத் மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது இஸ்லாமிய பெண் ஒருவரையும், அவரது 14 வயதான உறவினர் ஒருவரையும் பல பேர் கொண்ட கும்பல் அவர்களது இல்லத்திலேயெ வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.
 
மேலும், தன்னுடைய இரு உறவினர்கள் கொலை செய்யப்பட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளார். மாட்டிறைச்சி உண்ணும் இஸ்லாமியர்கள் என குற்றஞ்சாட்டி தாக்குதல்தாரர்கள் இந்த வன்முறையை தொடுத்துள்ளனர்.
 
ஆனால், அந்த குடும்பத்தினர் மாட்டிறைச்சி உண்ணவில்லை என மறுத்துள்ளனர். இந்து சமூகத்தில் பசுக்கள் புனிதமாக கருதப்படுகின்றன.
 
இந்த விவகாரம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவாரங்களுக்கு முன், இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஆனால், தற்போதுதான் அந்த பெண் இப்போதுதான் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
 
இந்த சம்பவம் இந்திய தலைநகர் புதுடெல்லியில் இருந்து 62 மைல் தொலைவிலேயே உள்ள மேவத் மாவட்டத்தில் நடந்துள்ளது. நாடு முழுவதும் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.